62. அருள்மிகு அஷ்டபுஜப் பெருமாள் கோயில்
மூலவர் அஷ்டபுஜப் பெருமாள், ஆதிகேசவப் பெருமாள்
தாயார் அலர்மேல்மங்கை, பத்மாஸனி தாயார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் கஜேந்திர தீர்த்தம்
விமானம் ககநாக்ருதி, சக்ராக்ருதி விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார், பேயாழ்வார்
இருப்பிடம் அஷ்டபுயகரம், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'அஷ்டபுஜ பெருமாள் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. வரதராஜர் கோயிலிலிருந்து காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் ரங்கசாமி குளம் என்னும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது.
தலச்சிறப்பு

Astapujam Gopuram Astapujam Moolavarஇத்தலத்து மூலவர் 8 திருக்கரங்களுடன் காட்சி தருவதால் 'அஷ்டபுயகரம்' என்ற பெயர் ஏற்பட்டது. வலது திருக்கைகளில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவற்றையும், இடது திருக்கைகளில் சங்கம், வில், கேடயம், கதை ஆகியவற்றையும் தாங்கியவண்ணம் ஸேவை சாதிக்கின்றார்.

மூலவர் ஆதிகேசவப் பெருமாள், அஷ்டபுஜப் பெருமாள், கஜேந்திர வரதன் என்னும் திருநாமங்களுடன் 8 திருக்கரங்களில் ஆயுதங்களுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் அலர்மேல்மங்கை, பத்மாஸனி, புஷ்பவல்லி ஆகிய திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றார். கஜேந்திரனுக்கு பகவான் பிரத்யக்ஷம்.

Astapujam Utsavarகோயில் திருக்குளத்தில் யானை ஒன்று தாமரை மலர் பறித்து பெருமாளை ஆராதித்து வரும்வேளையில் ஒருநாள் குளத்தில் இருந்த முதலை யானையை பிடித்துக் கொள்ள, பெருமாள் தமது சக்ராயுதத்தால் முதலையைக் கொண்டு யானையை காத்து அருளிய ஸ்தலம்.

ஸ்வாமி தேசிகன், மணவாள மாமுனிகள் ஆகியோர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களும், பேயாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 12 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com